நினைவாற்றலை அதிகப்படுத்த வேண்டும் என்று நாம் யாரிடம் சென்று கேட்டாலும் அவர்கள் பரிந்துரைக்கும் முதல் பெயர் வல்லாரை கீரையாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு வல்லாரையின் மூலம் நம் நினைவாற்றலை அதிகப்படுத்தலாம். வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

வெண்ணெய் உடன் வில்வ பழத்தின் உட்பகுதி உடன் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால் நியாபக சக்தியை அதிகப்படுத்தலாம். கருஞ்சீரகத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு. சாவைத் தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கருஞ்சீரகத்திற்கு உண்டு என்று நம் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதன் மூலமே இதன் பெருமையை நாம் அறியலாம். வெறும் வயிற்றில் தினமும் 10 கருஞ்சீரகத்தி மென்று சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை அதிகப்படுத்தலாம்.
நாயுருவி வேருடன் கரிசலாங்கண்ணியின் வேரின் சாறையும் சேர்த்து பருகினால் மூளை பலம் அடைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
தக்காளி, பாதாம் பருப்பு, வெண்டைக்காய் முதலியவற்றை நாம் நம் உணவுடன் சேர்த்து வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும்.