fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் செய்திகள்

நாவற்குழியில் சிவபூமி அறக்கட்டளையின் மற்றொரு பெரும்பணி ஆரம்பம் (Photo)

சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் தனது அறப்பணிகளில் ஒன்றாக நாவற்குழி சிவபூமி திருமூலர் மூலிகைத் தோட்டம் எனும் பெயரில் மூலிகைத் தோட்டமொன்றை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.

நாவற்குழி சித்திவிநாயகர் கோயில் ஒழுங்கையில் அமைந்துள்ள கடற்கரையில் விசாலமான காணியில் உருவாக்கப்படவுள்ள மூலிகைத் தோட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆனி உத்தர நன்னாளான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(28) நாவற்குழியில் இடம்பெற்றது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் கலந்து கொண்டு நாவற்குழி சிவபூமி திருமூலர் மூலிகைத் தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக அங்குராப்பணம் செய்து வைத்தார்.

எமது பாரம்பரிய மூலிகைச் செடிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் குறித்த மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளதுடன் உருவாக்கப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்கப்படுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

{சிறப்புத் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

கொரோனா வைரஸால் உயிரிழந்த புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்தில் உணர்வஞ்சலி!

World News

பாதுகாப்பு வழங்குமாறு கோரி ஆறு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த குடும்பப் பெண்: யாழில் சம்பவம்

TamilTwin

மேலும் பதினேழு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்: கதி கலங்கிப் போய் நிற்கும் உலக நாடுகள்

World News