fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Mavi Senathirajah
இலங்கைச் செய்திகள்

நாடுகளால் தான் ஐ.நாவில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியும்: சொல்கிறார் மாவை சேனாதிராசா

ஐ நா மனித உரிமைப் பேரவையில் எங்களுடைய கட்சிக்கு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடையாது. இந்த உண்மை பலருக்கும் தெரியாது. அங்கு சென்று வெளியேயுள்ள அறைகளில் தான் பேசுகிறார்கள். இதனையே  பத்திரிகைகளில் பெரும் செய்திகளாகப்  பிரசுரிக்கிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட நாடுகள் தான் இலங்கை தொடர்பாக ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை எடுக்க முடியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியின் முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டப் பணிகளைச் செயற்படுத்துவதற்கான  இவ்வாறு நிறைவுபெற்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை(02.03.2019) மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தாம் ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டுச் செல்ல வேண்டுமென ஒரு இணக்கத்தை வெளியிட்டுள்ளார். இந்தத் தீர்மானங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்பதில் பல்வேறு கேள்விகள் உள்ளன.

நாங்கள் எங்களுடைய தரப்பிலோ அல்லது எங்களுடைய அறிக்கைகளிலோ, தீர்மானங்களிலோ ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானம் தொடர்பான எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா தொடர்ந்தும் எங்களுடைய பிரேரணைகளுக்கு ஆதரவாகச் செயற்படப் போவதாக எங்களுக்கு வாக்குறுதி தந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற முக்கியமான நாடுகள் இந்த வருடம் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் சில தீர்மானங்களைக் கொண்டு வரவிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் வேண்டாமென்பது சிலரது கருத்துக்களாகவுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐ. நா தீர்மானத்தைத் தாம் எதிர்க்கிறோம் எனவும், இந்தத் தீர்மானத்திலிருந்து வெளியேறப் போவதாகவும்  கூறுகிறார். அவ்வாறானால் அரசாங்கம்  போர்க் குற்றங்கள் முதலான ஏனைய அனைத்துக் குற்றங்களுக்கும் கட்டுப்படாத, ஐ. நா மனித உரிமை பேரவைக்கு உட்படாத வகையில் இலங்கை வெளியேறிவிட அனுமதிப்பதா? என்பது தான் இங்குள்ள கேள்வி. 

ஐ. நா மனித உரிமைப் பேரவை இல்லாவிடில் இலங்கைப் பிரச்சினையைப் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் மனித உரிமைப் பேரவையிலேயே உறுப்பினர்கள் அல்ல. வல்லாண்மை நாடுகளாகவுள்ள அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம்.

ஆகவே, தற்போதுள்ள பிரேரணைகளை இழக்காமல், இலங்கை அதிலிருந்து விலகிச் செல்லாதவாறு கால அட்டவணையின் படி அவர்களை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளையே எங்களால் எடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ்.பல்கலை பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் நாளை

TamilTwin

வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

World News

பல்லாயிரக்கணக்கான இராணுவம் தப்பிச் செல்ல அனுமதித்த விடுதலைப் புலிகள்!! (Video)

TamilTwin