நமது உடலினை பாதுகாப்பதில் பருப்பு வகைகள் இன்றியமையாயது. உடலினை சீராக வைத்துக் கொள்வதற்கு பருப்பு வகைகள் உதவுகின்றன. பருப்புகளின் புரோட்டின் அதிக அளவில் காணப்படுகிறது. உடலில் வளர்ச்சியை தூண்டுவதில் புரோட்டினின் பங்கு அதிகம். நம்முடைய உணவுடன் கலந்து உள்ள பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
துவரம் பருப்பில் புரதச் சத்துடன் போலிக் அமிலம் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. துவரம் பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது,இதனால் குடலிநன் இயக்கம் சீராக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க முடியும்.

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது.
தட்டைப் பயறு, இதன் குழம்பின் சுவைக்கு ஈடு இணை கிடையாது. இதில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் இதய நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதிலுள்ள இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி முகச் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.