fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை பட டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

நட்பே துணை பட டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

     மீசைய முறுக்கு படத்தினை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இருக்கும் படம் நட்பே துணை.  இதில் வருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா நடித்து இருக்கிறார்.  இத்திரைப்படத்தினை சுந்தர்.சி இன் சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.  நட்பே துணை படம் ஹாக்கி விளையாட்டினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் மட்டும் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது.  நட்பே துணை படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்து உள்ளது.  இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்து உள்ளார்.  இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்று இருக்கும் நிலையில் டிரைலரும் நல்ல வரவேற்ப்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பார்த்திபன் தேசிங்கு ராஜா இப்படத்தினை இயக்கி உள்ளார், அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.  கரு. பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

Related posts

சென்னை வந்து சேர்ந்த மணிமகேலையின் முதல் வீடியோ!

TamilTwin India

விஜய்சேதுபதி, நயன்தாராவுக்காகவே ஒப்புக்கொண்ட சமந்தா

TamilTwin India

நவம்பரில் ரிலீசாகும் அஜய் தேவ்கனின் ‘மைதான்’ தேதியை உறுதி செய்த போனி கபூர்..!

TamilTwin India