fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்: உருகும் ஜான்வி கபூர்

ஒரு வருடத்திற்கு முன் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்திய சினிமாவையே உலுக்கிய சம்பவம் தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணம்.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமணத்திற்காக தன் இளைய மகள் குஷி கபூரோடு சென்றார். திருமணம் முடிந்ததும் குஷி கபூரம் ஸ்ரீதேவியும் வரவிருக்கும் ஜான்வி கபூர் பிறந்தநாளுக்கு பரிசுப்பொருட்கள் வாங்க செல்வதாக திட்டமிட்டு இருந்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்:  உருகும் மகள் ஜான்வி கபூர்

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போனிக்கபூர் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்றார். ஆனால் அவருக்கு கிடைத்த அதிர்ச்சி ஸ்ரீதேவியின் மரணம் தான். அந்த மரணம் அவரது மகள் மூத்த மகள் ஜான்வி கபூரை துக்கத்தில் ஆழ்த்தியது. காரணம் அம்மாவின் கடைசி தருணத்தில் அவருடன் இருக்க முடியாமல் போனது ஒரு காரணமாகும்.

அப்போது ஜான்வி தன்னுடைய முதல் படத்தில் பிஸியாக இருந்தார், அதனால்தான் திருமணத்திற்கு செல்லவில்லை. இந்த நேரத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு, என் இதயம் எப்பொழுதும் கனக்கும். ஆனால் அதில் நீங்கள் இருப்பதால் நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று உருக்கமான பதிவு செய்துள்ளார்.

Related posts

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தனுஷ்

N N

”கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ஆண்டவரே” இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனில் நக்கல் !

TamilTwin India

ஜெயம் ரவியின் 25வது படத்தைத் தயாரிக்கும் சுஜாதா விஜயக்குமார்

N N