fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

பிரதமரின் நலத்திட்ட உதவிகள் தேர்தல் பின்னணியா ?

கன்யாகுமரியில் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்யாகுமரிக்கு வந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.பி. தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

பிரதமரின் நலத்திட்ட உதவிகள் தேர்தல் பின்னணியா ?

திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் கன்யாகுமரியை அடைந்தார். ஆளுநர் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

தனுஷ்கோடி- ராமேஸ்வரம் இடையேயான ரயில்பாலம் அமைக்கும் திட்டம், பாம்பன்- ராமேஸ்வரம் இடையேயான புதிய பாலம் திறத்தல், மதுரை- செட்டிக்குளம் இடையே நான்கு வழிச்சாலை அமைத்தல் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தொடக்கவிழாவில் மோடி இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தை சார்ந்தவர், வீர மகன் அபிநந்தன் தமிழகத்தை சார்ந்தவர் இத்தகைய பெருமைக்குரியது தமிழ்நாடு என்று தமிழகத்தைப் பற்றி பேசினார் பிரதமர் மோடி.

Related posts

ஆம் ஆத்மி முக்கியஸ்தர் மீது துப்பாக்கி சூடு!- தொண்டர் பலி (Video)

World News

கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி!

World News

2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு

World News