நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தேங்காய் இறக்குமதிக்கான எவ்வித திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலையை அதிகரிக்கச் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். தேங்காய்க்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மாற்றுவதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை, அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் ஆராய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.