படம் வெளிவந்து அதை தெளிவான பிரிண்டில் பார்த்த பிறகுதான் படத்தின் கருத்துக்களும், மாஸும் மக்களுக்கு சென்று சேருகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் இயக்குனர் செல்வராகவனின் படங்கள். இவரின் படங்கள் வெளிவந்த பொழுது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் இன்றளவும் பேசும் திரைப்படங்களில் இவரின் படங்களுக்கு தனி இடமே உண்டு.

திருராக்கியார்
இதேநிலைதான் தற்போது வெளியான கே ஜி எஃப் படத்திற்கும் வந்துள்ளது. ஒரு உயரமான தோற்றம், பலமான ஹீரோ, பின்னணி இசை என பலம் வாய்ந்த தூண்கள் படத்தில் இருந்தாலும் இது பாதி மக்களிடையே மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் தெளிவான பிரின்ட் வழக்கம்போல இணையத்தில் வெளியானதும் இதை பார்த்துவிட்ட ரசிகர்கள் பல சீன்களை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என தெறிக்க விடுகின்றனர். இதற்கு ஒரு படி மேல் சென்று திருக்குறள் மற்றும் திருவள்ளுவருடன் இந்த படத்தின் வசங்களை இணைத்துக் கொடுக்கின்றனர்.
எட்டு ஷூக்கு பாலிஷ் போட்டால்த்தான்
அன்றைக்கு கிடைக்கும் ஓர்பன்
– திருராக்கியார்

திருராக்கியார்
“வாழ்க்கைன்னா பயம் இருக்கணும், அது நெஞ்சுக்குள்ள மட்டும் இருக்கணும், அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்கக்கூடாது, நம்மளை எதிர்க்குறவனோடதா இருக்கணும்”
“ராக்கி நெருப்பு, எதிரிங்க பெட்ரோல், எதிரிங்க அதிமாக ஆக, அவன் அதிகமா பத்தி
எரிவான்…”
“கேங்கைக்
கூப்பிட்டுட்டு வர்றவன் கேங்ஸ்டர்,
ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்”
இந்த வசனங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வந்தபடி உள்ளன.
