fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

திருக்கேதீஸ்வர மத வன்முறை சம்பவம்: அமைச்சர் மனோ கணேசன் கடும் கண்டனம்

சிவராத்திரியை முன்னிட்டு திருகேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில்  அங்கு எழுப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே வெட்ககேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள  இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துமுள்ளார்.

Mano Ganesan

நாயன்மார்களால் பாடல் பெற்றதும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும் விளங்கும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள வளைவு கத்தோலிக்க வன்முறையாளர்களால் நேற்றைய தினம்(03) உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் இன்றைய தினம் (04) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழர் ஒற்றுமையைக் கேள்விக்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாக்கியுள்ள இந்நிகழ்வு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வழிகாட்ட வேண்டிய  மதத் தலைவர்கள் வன்முறைக்குத்  தலைமை தாங்குவதை கடுமையாக கண்டிக்கின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க தலம் என்பது போன்று அதே மாவட்டத்தில் அமைந்துள்ள திருகேதீஸ்வர ஆலயம் தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல்பெற்ற இந்து தலம் என்பதும் அறியப்பட வேண்டும். 

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க தலம் என்பது போன்று அதே மாவட்டத்தில் அமைந்துள்ள திருகேதீஸ்வர ஆலயம் தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல்பெற்ற இந்து தலம் என்பதும் அறியப்பட வேண்டும்.

இரு தரப்புக்களும் இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை மீறும் எந்தவொரு அடாவடி நடவடிக்கையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் முதலில் இன்று(04) சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டும். இதற்குரிய பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டாவது உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஐந்தாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட வேண்டும் என நேற்று இரவு(03) மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரி இரத்நாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீநாத் பெரேரா, பிரதி பொலிஸ் மா அதிபர் அபேவிக்கிரம ஆகியோருடன் பேசிப் பணிப்புரைகள் வழங்கியுள்ளேன்.

இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுமாறு மன்னார் மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,  சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரைத் தொலைபேசியில் அழைத்துக் கூறியுள்ளேன்.

சிவராத்திரியை அடுத்து விரைவில் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு நேரடியாக வந்து சகல தரப்பினரிடமும் கலந்து பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நான் பெற்றுத் தருவதாக திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர்களிடம் உறுதியளித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்: இன்று இறுதி முடிவு?

TamilTwin

யாழ்.மாநகர உணவகங்கங்களில் உடன் அமுலான நடைமுறை: மீறினால் கடும் நடவடிக்கை!

N N

சுமந்திரனுக்கு தலைமைப் பதவி!

World News