fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

தாயாரின் காதை கடித்துக் குதறிய மகன்: யாழில் சம்பவம்!

தனது தாயாரின் காதைக் கடித்துக் குதறிய 20 வயதான மகனை எதிர்வரும் ஏப்ரல் மாதம்-01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.குருநகரிலுள்ள வீட்டில் தாய்க்கும், மகனுக்குமிடையில் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகன் தனது தாயாரென்றும் பாராது காதைக் கடித்ததில் அது துண்டானது. இதனையடுத்து தாயார் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய யாழ்ப்பாணம் பொலிஸார் தாயாரின் காதைக் கடித்துக் குதறிய மகனைக் கைது செய்து இன்று(19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன் போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ்: தெல்லிப்பழையில் இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு! (Photos)

TamilTwin

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் தப்பியோட்டம்! பொலிஸார் தீவிர தேடலில்

World News

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச: ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்!

TamilTwin