fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா !

பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினத்தை கொண்டாட காத்திருந்த இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி! புல்வாமா தாக்குதல், நம் ராணுவ வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டனர். அதுவும் நேருக்கு நேர் தாக்காமல் தற்கொலைப் படை தாக்குதல் என்பதுதான் அதில் வேதனை அளிக்கும் விஷயம்.

மீளாத்துயரத்தில் இருந்த குடும்பங்களுக்கு அனைவரும் திரண்டு சென்று ஆறுதல் கூறி வந்தனர். இதற்கு தக்க பதிலடி இன்று நம் இந்திய ராணுவத்தால் கொடுக்கப்பட்டது.

பயங்கரவாத கும்பலின் மேல் அதிரடி தாக்குதல் நடத்தினர், இதனால் பாகிஸ்தான் நிலைகுழம்பியுள்ளது.. மேலும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் மேலும் உச்ச கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு ராஜஸ்தான், குஜராத் மாநில எல்லை ராணுவ வீரர்களை எச்சரித்தார்.

தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்த சம்பவத்திற்கு முக்கிய பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பிரசன்னா, கமல்ஹாசன், சதீஷ், நடிகை சமந்தா மற்றும் இன்னும் பல பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related posts

தூதரகப் பணியாளருக்கு நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் விளக்கம்

World News

யாழ்ப்பாண விடுதியொன்றில் தங்கியிருந்து சிசுவை அகற்றிப் புதைத்த ஜோடி கைது

World News

இம்மாத இறுதியில் வெளியாகிறது சாதாரணதர பெறுபேறு!

TamilTwin