fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இனிமேலாவது தளபதி படத்தின் சர்ச்சைகள் குறையுமா ?
சினிமா

இனிமேலாவது தளபதி படத்தின் சர்ச்சைகள் குறையுமா ?

தளபதி படங்கள் வெளிவரும் நாட்களில் இருக்கும் பரபரப்பு எப்போதும் மறக்க முடியாத  சம்பவமாக இருக்கும். விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தான். படம் வெளிவருவதில் இருக்கும் சர்ச்சைகளும், பிரச்சனைகளுமே படத்திற்கு ஒரு விளம்பரமாக அமைந்துவிடும். எதனால் சிக்கல் வந்தது என்பதை தெரிந்துகொள்ளவே ஒரு கூட்டம் படம் பார்க்க செல்வர்.

தளபதி படங்கள் வெளியாகும் நாட்களில் ஏற்படும் சர்ச்சைகள் வியாபார உத்தியாகவே மாறிவிட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த அரசியல் ரீதியான தலைவா படத்தில் Time To Lead என்ற வசனம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி, இவ்விசயம் முதலமைச்சர் ஜெயலலிதா வரை சென்றது.

இனிமேலாவது தளபதி படத்தின் சர்ச்சைகள் குறையுமா ?

அவர் மிக கடுமையாக எச்சரித்து எடிட்டிங் செய்யப்பட்டு படம் வெளியாவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் இன்று  முதல்வரின் சுயசரிதையை அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு தற்போது அதே இயக்குனரால் படமாக எடுக்கப்படவுள்ளது. அதேபோல் தான் சர்க்கார், கத்தி, மெர்சல் போன்ற அனைத்து படங்களும் வெளியாக மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பி ரசிகர்களிடையே மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இனிவரும் காலங்களிலாவது விஜய் படம் வெளியாகும் நாட்களில் சர்ச்சைகள் குறையுமா ? எதுவாகினும் அவை தளபதி ரசிகர்களுக்கு குஷிதான்.

Related posts

துருவ் விக்ரம் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு

N N

கவின் பிறந்தநாள் ஸ்பெஷல், லிப்ட் படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள்.!

TamilTwin India

இயக்குநர் மகேந்திரன் காலமானார்

N N