தல 59 படத்தில் தற்போது பிரபல மூத்த நடிகர் இணைய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தல 59.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தற்போது இத்திரைப்படத்தில் டெல்லி கணேசும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் உடன் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தல 59 மே 1 நடிகர் அஜித் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று செய்திகள் வருகின்றன.
‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது