fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

தமிழர் பிரதேசங்களில் சாதாரணதர பெறுபேறுகள் திருப்திகரமானதாகவில்லை: சித்தார்த்தன் எம்.பி காட்டம்

இம்முறை க. பொ. த சாதாரணதர முடிவுகள் தமிழர் பிரதேசங்களில் திருப்திகரமானதாக இல்லை. ஆன போதும் நாங்கள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் எங்கள் கல்வித் தரத்தை உயர்த்த முடியும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

Sitharthan MP

யாழ். இணுவில் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய கல்வி முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தனியே ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகமும் ஒத்துழைப்பதன் மூலம் தான் கல்வியில் நாம் முன்னனரிருந்த நிலையை மீண்டும் அடைய முடியும்.

தமிழர் பிரதேசங்களில் கிராமப் புறப் பாடசாலைகள் மிகவும் பின்னடைவானதொரு நிலையை அடைவதற்கு கடந்த கால யுத்தமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. யுத்தம் காரணமாகப் புலம்பெயர்ந்து சென்றது மாத்திரமல்லாமல் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த காரணத்தால் பல்வேறு பாடசாலைகள் தங்களது வளங்களை இழந்திருக்கின்றன.

தற்போது பாடசாலைகள் சிறியளவான முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும் எதிர்பார்த்தளவு முன்னேற்றங்களை இன்னும் அடைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கபட்டசங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது தாக்குதல்

World News

மார்ச் 10 க்கு முன்னர் வந்த 2 ஆயிரம் பேரையும் உறவுகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்

World News

வெகுசன ஊடக செயலமர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்:வெகுசன ஊடக அமைச்சர் பங்கேற்பு! (Photos)

N N