fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
தொழில் நுட்பம்

தமிழக மாணவன் சாதனை…உலகில் முதல் முறையாக!!

மழை நீரில் மின் கம்பம் அறுந்து விழுந்தால் ஏற்படும் விபரீதம் அந்நியன் படம் தெரிவாக விளக்கி இருக்கும். ஆனால், இது போன்ற விபத்துகள் இனியும் ஏற்படாமல் இருக்க நம் தமிழகத்தை சேர்த்த பொறியியல் ஆராய்ச்சியாளர் ஹரி ராம் சுந்தர் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

TamilNadu Student Protection from Electric

எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வரும் ஹரிராம். தன்னுடைய கண்டுபிடிப்பை பற்றி சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, நாளுக்கு நாள் மழை நேரங்கள் அல்லது பிற சூழலில் மின் கம்பங்கள் அறுந்து விபத்து ஏற்பட்டு ஆண்டுக்கு 18 முதல் 20 பெயர் இறந்துவிடுகிறார்கள்.

இதனை தடுக்கும் விதமாக இந்த கருவி, மின் கம்பியோ,அல்லது மின்சார சர்கியூட் இல் பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் சேவை அதில் நிறுத்த படும். இதனால் மின் விபத்து தடுக்கலாம். அதோடு சர்வர் மூலமாக மின்சார அலுவலகத்துக்கு தகவல் அனுப்ப படும். இதனால் பாதிப்பும் எளிதில் சரி செய்யபடும் .

வெளி நாடுகளில் கூட இந்த கண்டுபிடிப்பு வருவதற்கு முன்னாள் இங்கு வந்துள்ளது. இது சர்க் கியூட்  பிரேக்கர் போன்ற பாகங்கள் வைத்து செய்தால் முப்பத்தி ஐந்து ஆயிரம் முதல் நாற்பது ஆயிரம் வரை செலவாகும். ஆனால், இவர் இதனை இரண்டாயிரம் ருபாய் க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும், தமிழக மின்சார துறை அமைச்சருடன் இதைப் பற்றி பேசி தமிழகத்தில் அமலுக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். விஞ்ஞானம் வளர வளர இது போன்ற பாதுகாப்பு கருவிகளும் பெறுக வேண்டும். அதற்கு, இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய கடமை நம் அனைவர்க்கும் உண்டு..

Related posts

200 கோடியை அடைந்துள்ள வாட்ஸப் பயனர்கள்!- மகிழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனம்

World News

சுவிட்ச் ஆப்பில் இருந்த ஸ்மார்ட்போன் தீ பிடிப்பு! பீதியில் மக்கள்

N N

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கால் பதித்தனர் நாசா விண்வெளி வீரர்கள்! (Photos)

TamilTwin