fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

வீட்டில் தக்காளி இருக்கா இதோ உங்க முகம் பளிச்

தக்காளியை சமையலில் மட்டும் அல்லாமல் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.  சமையலுக்கு உதவும் தக்காளியினை, முகத்தினை அழகு படுத்துவதற்கும் உபயோகப்படுத்தலாம்.  தக்காளியில் இருக்கின்ற லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தை முதிர்ச்சி அடையாமல் பாதுகாக்கிறது. 

தக்காளி சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது.  முகப்பருக்களை போக்குவதற்கும் தக்காளியினைப் பயன்படுத்தலாம்.

வீட்டில் தக்காளி இருக்கா இதோ உங்க முகம் பளிச்

     தக்காளிப் பழத்தினை விதையுடன் நன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தடவி வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையும் கருமை நிறமும் மறையும்.

     சருமத்தின் நிறம் மாறுவதற்கும் தக்காளியினை பயன்படுத்தலாம்.  1 டேபிள் ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரவேண்டும்.  இதனால் சரும நிறம் மாறுவதை கண்கூடாக காணலாம்.

Related posts

முகம் பளபளக்க உருளைக்கிழங்கு- தயிர் பேஸ்பேக்!!

N N

முகத்தின் அழகு கூட விளாம்பழ பேஸ்பேக்!!

N N

முகத்தில் உள்ள பருக்களை காணாமல் போகச் செய்யணுமா?

N N