fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்சி
சினிமா

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்சி

தமிழ் மொழியின் மூலமாகவே திரை உலகில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி.  இவர் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.  இதில் இவர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்.  பின்பு ஜீவா உடன் வந்தான் வென்றான் மற்றும் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் இவர் ஆர்யா ஜோடியாக நடித்தார்.  தற்போது இவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  அமிதாப் பட்சன், டாப்சி உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியானது.  இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இவர் தமிழில் கேம் ஓவர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்சி

     இந்த நிலையில் நடிகை டாப்சி அளித்து உள்ள பேட்டியில் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக கூறி இருக்கிறார்.  “நான் தமிழ் படங்களின் மூலமாகத் தான் திரை உலகில் அறிமுகம் ஆனேன் பெரிதாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும், ஹீரோயின் ஆக அறிமுகம் கிடைத்தது இங்கே தான் எனக் கூறி உள்ளார்.  தென்னிந்திய சினிமாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்று புத்தாண்டில் தீர்மானித்துள்ளேன்” என்று டாப்சி கூறி இருக்கிறார்.

Related posts

42 வது பிறந்தநாளை கொண்டாடும் ஜோதிகா!

N N

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் செய்த சாதனை !

TamilTwin India

மாஸ்டர் படத்தை போல தனுஷ் படத்தின் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

TamilTwin India