fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
JP Morgan Using CryptoCurrency
கிரிப்டோகரன்சி

ஜெ பி மோஹன் நிறுவனம் முதல் முறையாக கிரிப்டோகரன்சி மூலம் மொத்த வியாபார பணக்கொடுகல் வாங்கல்களை செய்துள்ளது.

அமெரிக்காவில் தளமாக கொண்டு இயங்கும் முதலீட்டு வங்கியான ஜெ பி மோஹன் நிறுவனம் முதல் முறையாக இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி மூலம் மொத்த வியாபார பணக்கொடுகல் வாங்கல்களை செய்துள்ளது. இதுவே அமெரிக்காவில் முதன் முறையாக முதலீட்டு வங்கியால் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கலாகும்.

முன்பு இதே ஜெ பி மோஹன் நிறுவன முதன்மை அதிகாரி ஜெமைன் டைமோன் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி தொழில் நுட்பத்தை வெளிப்படையாக கண்டித்து கருத்து வெளியிட்டிருந்தார். இப்போது அவர் இது ஒரு அறிமுகப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்றும். இதை பாவனை செய்து இலகுவாக மற்றும் கையாடல் இன்றி விரைவாக பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வங்கி அனுமதித்தமை மற்றும் ஜெ பி மோஹன் நிறுவனத்தின் பாவனை என்பவை கிரிப்டோகரன்சி தொழில்நுட்பம் மேன்மேலும் வளர உதவூம் என ஆய்வாளர் கருதியுள்ளனர்.

அட எல்லேரும் வெளியால இப்படிச் சொல்லி உள்ளால வேலையைகொண்டு செல்கின்றனர். இச் செய்தி வெளியிடும் போது பிட் கொயினின் விலை 3618.18 அமெரிக்க டாலர்களாகும்.

Related posts

முதலாவது அமெரிக்க வங்கி கிரிப்டோ கரன்சியில்… பிட் காயின் விலை அதிகரிக்குமா?

TamilTwin

கிரைப்டோப்பியா கிரிப்டோ கரன்சி இணையம் மீண்டும் ஆரம்பித்தது…

TamilTwin

பிட் காயின் பாவனை அதிகரிக்கின்றது! புதிய லைட்நிங் நெட்வர்க் ஆப்.

TamilTwin