முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உடைய வாழ்க்கை வரலாறானது அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்னுதாராமாக இருக்கவேண்டியது. தமிழக வரலாற்றில் அவர் போல் ஒரு இரும்புப் பெண்மணியை இனி நாம் பார்க்கமுடியாது. ஒற்றைப் பெண்ணாக தமிழகத்தை மிகத்திறம்பட ஆட்சி செய்தவர்.
இவரின் வாழ்க்கை வரலாறு எதிர்காலத்தில் வரவிருக்கும் மக்களால் மறக்க முடியாத வகையில் நினைவூட்டுவதாய் இருக்க வேண்டும். இந்த செய்திக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்தனர்.

பிப்ரவர் 24 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது படக்குழு. அம்மாவின் சுய வரலாறு பற்றிய திரைப்படத்தின் பெயர் தலைவி என்று பெயா் சூட்டப்பட்டு உள்ளது. ‘தலைவி’ என்றால் தமிழகத்தின் தலைவி என்றோ அல்லது தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவி எனவும் பொருள் கொள்ளலாம் என்பதுபோல் உள்ளது படத்தின் பெயர்.
இப்படத்துக்கு ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரிய உள்ளார். இதில் நடிக்க அனுஷ்கா பொருத்தமானவராக இருப்பார் என்று சில சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகின்றன, இருப்பினும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் சுயசரிதையை திறம்பட நடித்த கீர்த்தி சுரேஷ்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.