fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜெயம் ரவியின் அடுத்த 3 படங்களைத் தயாரிக்கும் ஒரே நிறுவனம்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த 3 படங்களை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.  ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அடங்க மறு இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டேவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  சண்டக்கோழி 2, தடம், நீயா 2 உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய, ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜெயம் ரவி : அடுத்த 3 படங்கள் தயாரிக்கும் ஒரே நிறுவனம்

இதைப் பற்றி ரவி கூறும் பொழுது,

     நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது.  இது போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்று நடிகர் ரவி குறிப்பிட்டு உள்ளார். 

தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். தற்பொழுது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரவி கூறியுள்ளார்.

Related posts

டுவிட்டரில் டிரேண்டாகும் நேர்கொண்ட பார்வை

N N

ரஜினி 168 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த முயற்சி!!

N N

ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த நிகிஷா பட்டேல்

N N