fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

ஜெனீவா விரைகிறார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் விரைவில் ஜெனீவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Wigneswaran - சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்ட த் தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும்- 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக  கால அவகாசம் வழங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜெனீவாவுக்குப் பயணமாகவுள்ளதாகத் தெரியவருகிறது. 

இதேவேளை, தற்போது இந்தியாவுக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எதிர்வரும் ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த தீர்மானம்!

World News

வித்தியா படுகொலை வழக்கு! யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

World News

முருகன் தந்தையின் இறுதி நிகழ்வு நாளை யாழில்; தமிழக அரசு இரங்குமா?

World News