கோடம்பாக்கம் வியக்குற அளவுக்கு ஒரு வார கோலாகல கொண்டாட்டம் ஆக நடந்து முடிந்தது சௌந்தர்யா – விசாகன் திருமணம் . அரசியல் வட்டாரம், சினிமா பிரமுகர்கள் என அனைத்து பிரபலங்களும் வருகை தந்து இருந்தனர். விதை பந்து அன்பளிப்பு மேலும் சிறப்பு செய்தது இத்திருமணத்தை.

ரஜினியின் உற்சாக நடனம் இதில் பெரும் கவன ஈர்ப்பை பெற்றது. அது மட்டும் அல்லாது, லதா ரஜினிகாந்த் கண் கலங்கியது, ரஜினியின் திருமண பரிசு, தனுஷ் மகன்களின் சேட்டைகள், என சமூக வலைத்தளங்களில் ஒரு வாரம் கலர் கலர் நியூஸ் வந்தவண்ணமே இருந்தது. அதிலும் மணப்பெண் கோலத்தில் தன் மகனை தூக்கியே வைத்துக்கொண்டு நெட்டிசன் அனைவரின் வாழ்த்தையும் பெற்றார் சௌந்தர்யா.
சரி, கல்யாணம் இவளோ அசத்தலான அமையும் போது, தேன்நிலவு பிளான் எப்படி இருக்கும் !!ஐரோப்பா காண்டத்தில் உள்ள ஐஸ்லாந்தில், உறைபணியில் தேன்நிலவுக்கு சென்றுள்ளார்கள் புதுமண தம்பதிகள்.உரைப்பணியில் இருவரும் அழகிய புன்னகையுடன் எடுத்து வெளியிட்டு இருக்கும் செல்ப்பீ மிகவும் அழகானதாக இருக்கிறது.
ஐரோப்பாவின் இரண்டாம் பெரிய தீவுவான ஐஸ்லேன்ட் ஹனிமூன்க்கு சிறந்த தேர்வு. அங்கு இருந்து அவர்கள் எடுத்து வெளியிட்ட புகைப்படம் தற்போது பிரபலம் ஆகி உள்ளது.
புகைப்படம் பார்க்கும் போதே “புது வெள்ளை நிலா இங்கு பொழிகின்றதே…” என்பது போல மனம் பாட தொடங்கி விடுகிறது. இருந்தும் மகன் வேத் கிருஷ்ணன் சென்னையில் இருப்பதால் அவரை மிகவும் மிஸ்ஸிங் என சௌந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார். என்ன தான் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்றாலும் தாய் உள்ளம், தாய் உள்ளம் தான்.
இல்லறம் சிறக்கட்டும்!!