fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Secrets behind Soundarya marriage
சினிமா

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

தமிழ் நாட்டோட சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் பல தலைமுறை தாண்டி கொண்டாட படுபவர் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மராத்தி தாய் மொழியாக கொண்ட இவர் தமிழ் ப்ராமண பொன்னான லதா வை திருமணம் செய்து தமிழ் நாட்டின் மருமகன் ஆனவரை, தமிழ் மக்கள் தமிழ் மகனாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அப்படி பட்ட மக்கள் செல்வாக்குள்ள ரஜினிக்கு இரு மகள்கள். ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற படையப்பா பாணியில் அழகிய குடும்பம்.

ஐஸ்வர்யா – தனுஷ் :

 மூத்த மகள், நடிகர் தனுஷை திருமணம் காதலித்து இரு குடும்ப சம்மத்தோடு திருமணம் செய்து கொண்டார். அப்போதைய கட்டத்தில் தனுஷ் வெற்றி நடிகர் அல்ல. ஆனாலும் தன் அப்பாவை போல பொறுமை குணம் கொண்டதால் அவரோடு அனுசரித்து திருமண வாழ்வில் வெற்றியை கண்டார் ஐஸ்வர்யா தனுஷ். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தனுஷை பற்றிய பல கிசு கிசுப்புகள் வந்தாலும், ஐஸ்வர்யா எதனையும் பொருட்படுத்தாது இல்லற வாழ்க்கையில் வெற்றி நடை போடுகிறார்கள். 

இளைய மகள் :

ஆனால், இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். கிராபிக்ஸ் டிசைனர், டைரக்டர் என பல துறையில் சாதனையாளர் ஆக சாதித்தார். இந்தியாவின் முதல் மூன்று மணி நேர அனிமேஷன் படத்தை தன் தந்தையை வைத்து இயக்கி, ஓட்டுமொத்த உலக சினிமா துறையினர் பார்வையை தன் பக்கம் திருப்பினார். 

இவர் பிரபல தொழில் அதிபர் ஆன அஸ்வின்னை காதலித்து வந்தார். Ksv கான்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற பிரபல நிறுவனம் நடத்தி வந்தவர். சென்னை srm காலேஜில் பி இ சிவில் முடித்து, பின்னர் அமெரிக்கா மேல் படிப்பு முடித்து விட்டு, குடும்பம் தொழிலை கவனிக்க சென்னை வந்து விட்டார்.

இவர் சௌந்தர்யாவும் ஜிம்மில் சந்தித்து பழகி, பின்னர் இரு வருட காதல், இரு வீட்டார் சம்மதத்தோடு கோலாகல கொண்டாட்டம் ஆக அரங்கேறியது. இவர்களின் ஆறு வருட வாழ்க்கையின் ஆதாயமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தார். ஆனாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு பல வந்ததால் குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் கணவரை பிரிந்து தன் தாய் இல்லத்தில் குழந்தையோடு வசித்து வந்தார் சௌந்தர்யா. 

ரஜினியின் சோகம்:

மகளின் வாழ்க்கை பெரிய கவலையை கொடுத்தது ரஜினிகாந்த் அவர்களுக்கு. இரு தரப்பிலும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கியும் தோல்வியில் முடிந்தது. பின்னர் அவர்களின் விவாகரத்து விஷயத்தை சௌந்தர்யாவே அறிவித்தார். இருவரும் விவாகரத்து பெற்று மகனை தன்னோடு வைத்து கொண்டார் சௌந்தர்யா. 

பல கிசு கிசு :

ஒரு பெண்ணின் வாழ்க்கை தடம் மாறினால், அதை வைத்து பல கதைகள் வலம் வந்தது. இது சௌந்தர்யாவின் வாழ்விலும் நடந்தது. இவரின் முன் கோபம் வீட்டில் அனைவரையும் வெறுக்க வைக்கிறது என்று அஸ்வின் ரஜினிகாந்த்யிடம் நேரில் முறையிட்டதாக தகவல் வெளியே வந்தது. அது மட்டும் அல்லாமல், தனுஷ் உடன் காதல் விவகாரம் விவாகரத்து முக்கிய காரணம் என்றார்கள். பின்னர், இயக்குனர் பா. விஜய்யுடன் காதல் என்று பல கிசு கிசுக்கள் வெளி ஆயின. 

முற்று புள்ளி :

இது போன்ற செய்திகள் ரஜினியின் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அப்போது சௌந்தர்யா தன் இரண்டாம் திருமணத்தை தகவலை வெளியிட்டு அனைத்து கிசு கிசுப்புகளுக்கும் முற்று புள்ளி வைத்தார். 

விசாகன் வணங்காமுடியை தான் திருமணம் செய்ய போவதாக வெளியிட்டார். ஒரு படத்தில் மட்டும் நடித்த இவர், தொழில் அதிபர் ஆவார். 

விசாகன் :

யார் இந்த விசாகன் !?

திமுக வின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தம்பி வணங்காமுடியின் மகன் தான் விசாகன் வணங்காமுடி. பல கோடி சொத்துகளுக்கு அதிபதியான இவர் ஏற்கனவே திருமண ஆகி விவாகரத்து பெற்றவர். இவரின் முதல் மனைவி,

கனிகா பத்திரிக்கையாளர். இவர்களின் திருமணம் விவகாரத்தில் முடிவு அடைத்தது. பின்னர் கனிகா திரைப்பட தயாரிப்பாளர் ஆன அருண் மணியை திருமணம் செய்து கொண்டார். இந்த பெயரை எங்கயோ கேட்டது போல இருக்க? 

ஆமா, இவர் திரிஷா வை திருமண செய்து கொள்ள போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவை ஏனோ நின்று விட்டது. அவர் கனிகாவை மறுமணம் செய்து கொண்டார். 

ஆகவே, விசாகன் வேறு திருமணத்திற்கு தயார் ஆனார் என்று செய்திகள் வெளியாகின. அபெக்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் அதிபதியான விசாகன், லண்டனில் mba பயின்றுள்ளார். தன்னுடைய தந்தை சகோதரியுடன் தொழில் அதீத வளர்ச்சி அடைந்துள்ளார் விசாகன். ஒரு வாரம் கொண்டாட்டத்துடன் கோலமாக முடிந்தது சௌந்தர்யா விசாகன் திருமணம். 

சிறிய குழப்பம் :

இதற்கு இடையில் அஸ்வின் மகனை தன்னுடன் அழைத்து கொள்வதாக கேட்டுள்ளார் ரஜினிகாந்த்திடம். இதனை ரஜினிகாந்த் மறுத்து விட்டார். ஆனால், தன்னுடனே மகனாக வளர்ப்பதாக விசாகன் கூறியுள்ளார். இதனால், ரஜினி யின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது. 

கோடியில் செலவு செய்வது முக்கியம் இல்லை. வாழ்க்கை வெற்றி அடைவதே மிக முக்கியம். 

இவர்களின் திருமணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்…..

Related posts

அப்பாவான பிரபல நடிகர், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு !

TamilTwin India

அஜித், விஜய் மீது குற்றம் சாட்டிய பெண் இயக்குனர்!!!!

N N

அதிதி ராவ்வுக்கு தொடர்ந்து காதல் தொல்லை! சைக்கோ உதயநிதி

TamilTwin India