fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Suriya NGK Movie New Look
சினிமா

சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!!

பல அழகிய கதாபாத்திரத்தில், மிகவும் தேர்தெடுத்து நடிக்க கூடிய முன்னணி நடிகர் சூர்யா அவர்கள். அவரின் அடுத்த படமானNGK படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படம் ஒரு அரசியல் படம். நந்த கோபாலன் குமரன் என்ற கதாநாயகனின் பெயரை NGK என சுருக்கி தலைப்பாக வைத்துள்ளார்கள். மக்கள் NGK-NGK என்று கோஷம் போடுவது போல செகண்ட் பிரேம் வருகிறது.

ஒவ்வொரு பிரேமும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேச படுகிறது. ட்ரைலரின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் காரசாரமாக பேசப்படுகிறது. ஊழல்வாதிகளை தோல் உரிக்கும் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலர் இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தோற்றம் போல உடல் அமைப்பு இருந்தாலும். தாடி மீசை என பல தோற்ற வித்தியாசம் காட்டியுள்ளார் சூர்யா. சாய் பல்லவி படத்தின் கதாநாயகி. மாரி இரண்டுக்கு அடுத்து தமிழில் இப்படமும் அவருக்கு வெற்றியாக அமையும் என பேச படுகிறது. வசனம் ஒவ்வொன்றும் காட்டமாக இருப்பதால் படத்தின் ஏதிர்பார்ப்புகள் கூடி கொண்டே இருக்கிறது.
ட்ரைலரின் கடைசி பிரேமில் ரத்தம் படிந்த கைகளை மக்களை நோக்கி நீட்டுகிறார ஹீரோ.

தலைவா படத்தின் லாஸ்ட் பிரேமில்  விஜய் கைகளை அசைப்பது போல இதுவும் மக்களை நோக்கி கை காட்ட படுகிறது,  பிரபலமாக பேசப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ‘ நீ இறங்கினால் சாக்கடை கூட சுத்தமாகும், கத்துக்கலாம் தலைவரே ‘ , என்ற வசனங்கள் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயம் செய்வது போல காட்சிகள் வருவதால், ஒரு சாமானியனின் அரசியல் பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடைசியில் சூர்யா ‘காத்திருப்போம்’ என்று கூறுகிறார். ஆனால்,  காத்திருக்க முடியாமல் எதிர்பார்ப்புகளை அதிமாகி விட்டனர் பட குழுவினர்!
படம் எப்படி இருந்தாலும், சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேட்டை விருந்து செல்வராகவன் தயார் செய்து வருகிறார் என்பது நூறு சாதவீத உண்மை.

படம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க – சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

Related posts

கர்நாடகாவில் படப்பிடிப்பினைத் துவக்கிய தளபதி 64!!

N N

அசிங்கப்படுத்திய மீரா மிதுன், வக்கீல் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்த பிரபல நடிகை..!

TamilTwin India

அஜித் ஸ்டைலில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

TamilTwin India