fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சூர்யாவின் 5 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட ‘மண்ணுரண்ட’ பாடல்..!

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்திலுள்ள மண்ணுரண்ட பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதிலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் உள்ள ‘மண்ணுரண்ட’ பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பாடலுக்கு கே. ஏகாதசி வரிகள் எழுத செந்தில் கணேஷ் பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அண்ணனின் அடுத்த படத்தினைப் பற்றி கூறிய கார்த்தி!!!

N N

தனது ஸ்டைலில் தங்கைக்கு வாழ்த்து கூறிய நேகா ஷர்மா

TamilTwin India

அடுத்தடுத்து உயிரிழந்த பிரபலங்கள், பிரதமர் மோடி வெளியிட்ட உருக்கமான பதிவு!

TamilTwin India