fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபல நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட சூப்பர் டீலக்ஸ்

விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கின்ற படம் சூப்பர் டீலக்ஸ்.  இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற கேரக்டரில் திருநங்கையாக நடித்து உள்ளார்.  திருநங்கை கேரக்டரில் நடிப்பது பற்றி ஏற்கனவே செய்திகளும் படங்களும் வெளியாகி இருந்தன.

இதனால் இப்படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.  இப்படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என பலர் நடித்து உள்ளனர்.

பிரபல நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட சூப்பர் டீலக்ஸ்

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமார ராஜா இயக்கி இருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.  ஆரண்ய காண்டம் படத்தினை எவ்வாறு ஓரிரு வரிகளில் கூற முடியாதோ, அதைப் போலவே இந்தப்படத்தினையும் ஓரிரு வரிகளில் கூற முடியாது.  ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத 13 கதாப்பாத்திரங்களை ஒரே புள்ளியில் இணைத்து உள்ளது திரைக்கதை.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.  ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தின் விநியோக உரிமை கைப்பற்றப்பட்டுள்ளது. யு நாட் எக்ஸ் வெளியிடும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கன்னடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் !

TamilTwin India

மோசமானது சஞ்சய்தத் உடல்நிலை, சிக்கலில் கேஜிஎஃப் படக்குழு..!

TamilTwin India

நடிகர் வையாபுரிக்கு வந்த சோதனையை பாருங்கள்..!

TamilTwin India