fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

சூட்டுக் காயங்களுக்கு இலக்கான இராணுவச் சிப்பாய்!

கிளிநொச்சி பூநகரி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு(09) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இராணுவச் சிப்பாய் நேற்றுப் பிற்பகல் பூநகரியிலுள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

வாக்குகளை எண்ணும் பணி மற்றும் கட்சி முகவர்கள் நியமனம் குறித்து வர்த்தமானி அறிவிப்பு

World News

கொரோனா தொற்று: இலங்கையில் உயிரிழப்பு ஏழாக அதிகரிப்பு!

TamilTwin

கூட்டமைப்பை கடுமையாக சாடியுள்ள வடக்கு முன்னாள் முதலமைச்சர் (Photos)

TamilTwin