fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளால் பாதிப்பு: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ். சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் காரணமாக பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இரண்டு கோடி நஷ்டஈடு செலுத்துமாறு உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(04) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 40,000 ரூபாவுக்கும் குறையாத நஷ்டஈடு செலுத்த வேண்டுமெனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்த நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

குப்பிழான் குறிஞ்சிக்குமரன் முன்பள்ளித் திறப்பு விழா இன்று

TamilTwin

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

World News

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான அறிவிப்பு

World News