fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

சுன்னாகத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்குத் திறந்து வைப்பு (Videos, Photos)

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பகுதியில் பருத்திக் கலட்டி 1 ஆம் குறுக்கு வீதி, பருத்திக் கலட்டி 2 ஆம் குறுக்கு வீதி ஆகிய வீதிகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை(20) காலை இடம்பெற்ற நிகழ்வில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் தேசகீர்த்தி, சமூக திலகம் பாலசிங்கம் சுரேஸ்குமார் கலந்து கொண்டு குறித்த இரு வீதிகளையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினருடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் தெற்குப் பிரதேசசபை உறுப்பினர் தேசகீர்த்தி, சமூக திலகம் பாலசிங்கம் சுரேஸ்குமாரிடம் (ஜேபி) மேற்படி பகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கமைய 8 ஆம் வட்டாரத்திற்கென ஒதுக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா நிதியில் குறித்த இரு வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

குறித்த இரு வீதிகளும் நீண்டகாலமாகத் திருத்தப்படாமையால் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் தற்போது இரு வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

A/L மற்றும் புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

World News

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 4 பேர் பூரண குணம்

World News

உலங்கு வானூர்தி விபத்தில் உயிர்தப்பிய சஜித் பிரேமதாச: சதி வேலைதான் காரணமா?

TamilTwin