fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

சிறப்புற இடம்பெற்ற யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றத்தின் மகளிர் தின விழா

யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றத்தின் மகளிர் தின விழா இன்று சனிக்கிழமை (23) முற்பகல்-10 மணி முதல் யாழ். கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள மன்றத்தின் காரியாலய மண்டபத்தில் மன்றத்தின் உபதலைவர் திருமதி- தயாநாதன் சந்திரநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த விழாவில் யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சபையின் செயலாளர் திருமதி வேதவல்லி செல்வரட்ணம் பிரதம விருந்தினராகவும், யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி- விக்னேஸ்வரி பவநேசன், தென்மராட்சிப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- மகிந்தினி விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்றத்தின் கீழ் இயங்கி வரும் கட்டுடை சேமிப்புக் கழகத்தின் ஸ்தாபகராகவும், மேற்படி சேமிப்புக் கழகத்தின் தலைவராகவுமிருந்து அமரத்துவமடைந்த முதலியாரின் பன்முகப்பட்ட சமூக சேவைகளைப் பாராட்டிச் சிறப்புக் கெளரவமளிக்கப்பட்டது. இவருக்கான கெளரவிப்பை அவரது துணைவியாரான முதலியார் மங்கையற்கரசி சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் உரை, விசேட கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. இந்த விழாவில் கலைநிகழ்வுகளைச் சிறப்பான முறையில் அரங்கேற்றிய மகளிருக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றத் தலைவர் பொ. சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர்கள், மன்றத்தின் பணிப்பாளர்கள், பணியாளர்கள்,ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Jaffna Events
Jaffna Events
Jaffna Events
Jaffna Events
Jaffna Event

Related posts

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா 12 கோடி நிதி

World News

இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி இலங்கை எப்போது தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது?

SL News

அன்றாட உணவுக்கே அல்லல்படும் முல்லை வயோதிபத் தம்பதியருக்கு உதவிக்கரம் நீட்டிய நோர்வே அரண்மனை சிறுவர் காப்பகம் (Video, Photos)

TamilTwin