fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ponvilla-eelalai-5
இலங்கைச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற யாழ். ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா

யாழ்.ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா சனிக்கிழமை(06) பிற்பகல்-03 மணி முதல் ஏழாலை முத்தமிழ் மன்ற கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி மன்ற தலைவர் நா. இலட்சுமிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாண ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி- சிவகரன் பிரணவசொரூபி, யாழ்.மாவட்டச் செயலகப் பிரதம பொறியியலாளர் அ. யசிந்தன், யாழ். மாவட்டப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மு.சுலோசனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வலி.தெற்குப் பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் திருமதி- ரஜனி நரேந்திரா கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய விழாவில் முத்தமிழ் மன்றத்தின் கடந்த ஐம்பது வருட கால வளர்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து மூத்தோர்கள் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மேற்படி மன்றத்தின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் “முத்தமிழ்” எனும் மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. மலரின் வெளியீட்டுரையை வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், பிரபல எழுத்தாளருமான ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) ஆற்றியதுடன், நூலின் மதிப்பீட்டுரையை வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.மகாலிங்கசிவம் நிகழ்த்தினார்.

விழாவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினரின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, மேற்படி விழாவில் விருந்தினர்களுடன், கல்விமான்கள், கலைஞர்கள், கிராம மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா
ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா
ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா
ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் பொன்விழா

Related posts

20 ஆவது திருத்தம் ஆபத்தானது!! (Photo)

TamilTwin

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

World News

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி?

TamilTwin