fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
படித்ததில் பிடித்தது

சினேகா இப்படி ஒரு சாதனை செஞ்சுட்டாங்களா???

சினேகா என்ற பெயரை கேட்டதும் புன்னகை அரசினு நினைச்சீங்களா?

அப்படி சொல்லுவதை விட தேசத்தின் புன்னகைனு சொல்லலாம்.அப்படி என்ன செஞ்சாங்க….தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்த்த வக்கீல் சினேகா. நாம் அனைவர்க்கும் ஜாதி மதம் ஒழிக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், யாருமே அதனை செயல் படுத்த வழிகளை தேடவில்லை.

இவரின் குடும்ப சூழலும் ஜாதி மதக்கோட்பாடை எதிர்த்ததால், சிறிய வயதில் இருந்து ஜாதி மதம் என்ற இடத்தை எந்த படிவத்திலும் நிரப்பாமல் இருந்து வந்தார் சினேகா. பல நேரங்களில் இந்தியன் என்று நிரப்பி வந்தார்.

ஒரு கட்டத்தில் தமக்கென்று தனி ஒரு  அடையாளம் வேண்டும் என்று நினைத்த சினேகா, தன் முதல் முயற்சியை 2010 ஆம் ஆண்டு தொடங்கினர். தான் எந்த ஒரு மதமோ, ஜாதியோ சேர்ந்தவள் அல்ல, என்ற சான்றிதழ் வாங்க முயற்சிகள் தொடங்கினர். ஆனால், நம் நாட்டில் அப்படி ஒன்றும் கிடையாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஜாதி, மத அடிப்படையில் தனக்கென எந்த ஒரு சலுகைகள் வேண்டாம் என்ற நோக்கத்தில் முயற்சித்தார்.

திருப்பத்தூர் துணை கலெக்டர், சினேகா அவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கலாம் என்று முடிவுக்கு வந்தார் . ஆகையால், அவரின் சிறிய வயது முதல் அவருடைய அனைத்து சான்றிதழையும் பார்த்தாலும், அனைத்திலும் சாதி மதம் என்ற இடம் நிரப்ப படாமல் இருந்தது. ஆகையால், சினேகாவின் நோக்கம் சரியானது, இதனால் வேறு எந்த ஒரு தனி நபரையும் பதிக்காததால், சினேகா எந்த ஒரு மதம், ஜாதி சேர்த்தவர் அல்ல என்று சான்றிதழ் வழங்கினார்.

இதுவே, புரட்சி என்று நினைத்தால், இவரின் கணவர் பார்த்திப ராஜா கூறுகிறார், எங்கள் மூன்று மகளுக்கும் அந்த இடம் நிரப்ப படாமலே இருக்கும். அதோட எங்கள் மகளின் பெயர்கள் மாற்று இரு மதத்தின் பெயரை கலந்து வைத்துள்ளதாக சொல்லி மேலும் நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தினார்.

ஜாதி ஒழிப்பு பேசும் மக்களுக்கு நல்ல வழிப்பாதையை ஏற்படுத்தி கொடுத்துவிட்டார் சினேகா. இந்தியாவின் ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெரும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சினேகா.

Related posts

இப்படி ஒரு அரசியல்வாதியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா?

N N