fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”சாத்தான்குளம் ட்வீட்” டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்..!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரின் சித்திரவதையால் பலியான சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சத்தியமா விடவே கூடாது என்று ட்வீட் செய்ததை பிரபல டிவி தொகுப்பாளினி கேள்வி கேட்டு பதிவிட்டதற்கு ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து தங்கள் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தை மகன் இருவரும் சாத்தான்குளம் போலீஸ் சித்திரவதையால் இறந்தனர் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். பல தரப்பிலும் அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக அறிகை அளித்தார். பெண் தலைமைக் காவலர் ரேவதி அன்று நடந்த சம்பவங்களை மிகவும் பயத்துடன் சாட்சியம் அளித்ததாக மாஜிஸ்திரேட் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தந்தை மகன் போலீஸ் சித்திரவதையில் இறந்ததாக கூறி கொலைவழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர், தந்தை மகன் மரணத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை மகன் போலீஸ் சித்திரவதையில் இறந்த சம்பவம் இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் போலீஸ் சித்திரவதை மரணங்களை விவாதமாக்கியது.

இந்த நிலையில், தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமாவிடவேகூடாது’ என்று ஹேஷ்டேக் பதிவிட்டார். இதனை அடுத்து, டுவிட்டரில் ரஜினி தெரிவித்த ‘#சத்தியமாவிடவேகூடாது’ என்ற வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆனது.

Related posts

கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கௌதமி

TamilTwin India

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத்தமிழன்

N N

உலகநாயகன் படத்தில் நடிக்க மறுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..! மேடையில் வெளிப்படையாக கூறிய கமல்

TamilTwin India