fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சன்னி லியோன் இடத்தை பிடித்தார் ஷ்ரத்தா தாஸ்

     சன்னி லியோன், இந்தி படங்களில் குத்தாட்டம் போட்டு இந்தியில் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழியிலும் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கியவர்.  இவர் தமிழில் விஷால் நடிப்பில் உருவாகி வருகின்ற அயோக்யா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருந்தார்.  இந்நிலையில் தற்போது அந்தப் படத்தில் ஷரத்தா தாஸ் ஆடி இருக்கிறார்.  இது குறித்த வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தி ஷரத்தா தாஸ் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் “தமிழில் விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது”என பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோன் இடத்தை பிடித்தார் ஷ்ரத்தா தாஸ்

இப்பாடல் கிளப் ஒன்றில் ஆடப்படுவது போன்றதாகும்.  அதற்காக கிளப் போன்ற செட் அமைத்து இரண்டு நாட்களாக இப்பாடல் படமாக்கப்பட்டு உள்ளது.  தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என பல படங்களில் நடித்த ஷ்ரத்தா தாஸ் தற்போது சென்னையில் சில நாட்களாக தங்கி இருக்கிறார்.  இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்து உள்ளார்.  சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.  பாபா மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிகிறார்.

Related posts

விட மாட்டேன், பழி வாங்குவேன் கவின் வெளியிட்ட வீடியோ!

TamilTwin India

விஷால் உனக்கு இருக்கு ஆப்பு, இனி நீ தூங்க மாட்ட இயக்குநர் மிஷ்கின் ஆவேசம் !

TamilTwin India

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் இணையும் துருவ் விக்ரம் !

TamilTwin India