fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Carrot Tamil Medicine
உணவலங்காரம்

சக்கரை நோய் அல்லது நீரிழிவு குணப்படுத்த கேரட்!

கேரட் ஒரு அற்புதமான மரங்கறி அல்லது கிழங்குவகையை சார்ந்தது. யாரும் அறிவார்கள். சின்னனில் உங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி பெரியவர்கள் சொல்வார்கள் “நல்லா கரட்டில சாப்பிடுங்கள் அப்பதான் கண்பார்வை, மூளைவளர்ச்சி கூடும்” என்று. கேரட் பல மருத்துவ குணம் கொண்டது மேலும் உடல்  அழகு அதிகரிக்க உதவும். கேரட் பயன்களை காண்போம்.

கேரட் கொண்டுள்ள சத்துக்கள் :

கேரட் மிகுந்த சத்துக்கள் கொண்ட காய் ஆகும்.  அதில் வைட்டமின் A, வைட்டமின் K, மினெரல்ஸ்,  ஆன்டி -ஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் ப்ரோடீன் 0.9கிராம்,  கார்போஹைட்ரெட்ஸ் 9.6 கிராம், பைபர் 2.8 கிராம் உள்ளது.

கேரட் பயன்கள் :

கேரட் நீரிழிவு நோய் குணப்படுத்த உதவும்.  நீரிழிவு நோயை சக்கரை நோய் என்று கூறுவோம்.  உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றால் சக்கரை நோய் வரும். அல்லது இன்சுலினை சரியாக பயன்படுத்தவில்லை என்றாலும் சக்கரை நோய் வரும். சக்கரை நோய் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிக அளவு சக்கரை இருக்கும். உடலுக்கு அவசியமான சக்கரையை சத்து ஆக மாற்ற இன்சுலின் அவசியம்.  இல்லை என்றால் நீரிழிவு நோய் வந்தால் இன்னும் பல நோய்கள் வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும், அதிகம் தாகம் எடுக்கும், பசி அதிகம் எடுக்கும்.

சக்கரை நோய் குணப்படுத்த கேரட் இன் பங்கு :

சக்கரை நோய் பல  வகைப்படும். அவை நீரிழிவு முதல் வகை மற்றும் இரண்டாம் வகை ஆகும். சக்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு அதிகம் சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால் கேரட் சக்கரை நோயை குணப்படுத்த உதவும்.  சரியான உணவு பழக்கம் இருந்தால் சக்கரை நோய் வராது. கொழுப்பு சத்து கம்மியாக உள்ள காய்களை உண்டால் சக்கரை நோய் வராது. அதற்கு அடிக்கடி கேரட் juice குடிக்க வேண்டும்.

சக்கரை நோய் இரண்டாம் வகை குணப்படுத்த உணவில் அடிக்கடி கேரட் சேர்த்து கொள்ள வேண்டும். அல்லது தினமும் கேரட் ஜூஸ் குடிக்க  வேண்டும். கேரட் ஜூஸ் இல் கார்போஹைட்ரெட்ஸ் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

கிளைசெமிக் இன்டெஸ்  கொஞ்சமாக உள்ள உணவை உண்டால் சக்கரை நோய் இரண்டாம் வகை குறையும்.  கேரட் இல் கிளைசெமிக் இன்டெஸ் குறைவாக உள்ளது. மேலும் கேரட் இல் உடல் ஆரோகியதை அதிகரிக்க உதவும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அதனால் கேரட் சாப்பிட்டால் நோய் குணமாகும். கலிபோர்னியா பல்கலைக்கழகம் கேரட் இல் உள்ள  பீட்டா கரோடின் என்னும் சத்து நீரிழிவு நோயை குறைகிறது என்று கூறுகிறார்கள்.

கேரட்டில் உள்ள வைட்டமின் சத்து இன்சுலின் சுரக்க உதவும் பீட்டா செல்லை அதிகரிக்க உதவுகிறது என்று ஸ்வீடெனில் உள்ள lund பல்கலைகழகம் ஆராய்ச்சியில் கூறி உள்ளது.

கேரட் சாப்பிடும் முறை:

கேரட் மண்ணுக்கு அடியில் விளையும் காய் ஆகும். எனவே அதை உண்ணும் முன் நன்கு கழுவ வேண்டும்.  கேரட் பச்சையாக தினமும் இரண்டு சாப்பிடலாம். அது செரிப்பதற்கு 20 நிமிடம் ஆகும். பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை ஜூஸ் செய்து குடிக்கலாம். கேரட் ஜூஸ் செய்யும்போது சிறிது அளவு கொத்தமல்லி இலையை கலந்து கொள்ளவும். அதை அரைக்கும் போது சிறிது பால் கலந்து அரைத்தால் சுவையாக இருக்கும். பின்பு அதை வடிகட்டியில் வடிகட்டவும். இந்த சாறை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்தால் சக்கரை நோய் விரைவாக குணமாகும். அல்லது ஒரு கேரட் மற்றும் ஒரு பாகற்காய் எடுத்து கொள்ளவும்.  இரண்டையும் ஜூஸாக அடித்து வடிகட்டி குடிக்கலாம். குடித்தால் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

நம் மதிய உணவில் கேரட் பொரியல் சேர்த்து  உண்ணலாம்.

இவ்வளவு பயன்களை கொண்ட கேரட் முகத்தை அ ழகு படுத்தவும் உதவுகிறது. தினமும் உண்டால் ரத்தம் சுத்தமாகும் உடல் ஆரோகியமாகும். அதனால் முகம் பொலிவு பெரும்.

Related posts

ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் கிவி – வாழைப்பழ சாலட்

N N

ஆரோக்கியமான பேரீச்சைப் பணியாரம் !!!

TamilTwin India

உங்கள் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!

TamilTwin