fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

க.பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது:வரலாற்று சாதனை படைத்தது இலங்கை!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 9413 பேர் 9 ஏ தரச் சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்தத் தகவலை இலங்கையின் கலவியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்படி பெறுபேறு இலங்கையின் கல்வித் துறையில் வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டம் விரைவில் தளர்வு?      

TamilTwin

கூவிலில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்

TamilTwin

ஆட்சியாளர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தல்

TamilTwin