கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம்(28) வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்விக் கட்டமைப்புடன் சார்ந்த பரீட்சைப் பெறுபேறுகளைக் காலதாமதமின்றி நிர்ணயிக்கப்பட்ட திகதியொன்றில் வெளியிடுமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன்பிரதி பலனாக க. பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை இன்றைய தினம்(28) வெளியிடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.