பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை பெண்கள் தங்களுடைய சருமத்தினை பாதுகாக்க பல்வேறு யுக்திகளை பயனடுத்தி வருகின்றனர். அத்தகைய நிலையில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சருமத்திற்கு பாதுகாப்பிற்கு பல பொருட்கள் இருக்கும் நிலையில் கோல்ட் கிரீம் மூலம் சருமத்தினை எவ்வாறு பாதுகக்கலாம் என பார்க்கலாம்.
கோடைக் காலத்தில் காணப்படும் மிருது தன்மையும், பளபளப்பும் குளிர் காலத்தில் நமது சருமத்தில் காணப்படாது. எப்பொழுதும் நமது சருமம் மிருது தன்மையுடன் இருக்க நமது சருமத்தை நன்கு பராமரிக்க வேண்டும். இதற்கு வேறு எந்த பொருட்களும் தேவை இல்லை கோல்ட் கிரீம் மட்டுமே போதும்.

கோல்ட் கிரீம்களை இரவில் பேஸ் பேக் போன்று சருமத்தில் தடவி அதனை உலர விட்டு மறுநாள் காலை கழுவினால் சருமம் நன்கு பொலிவுடனும் மிருதுவாகவும் இருக்கும்.
உதடுகளில் ஏற்ப்படும் வறட்சிகளை போக்குவதற்கு நாம் கோல்ட் கிரீம்களையே பயன்படுத்தலாம். சாதாரண லிப் பாம் போன்று இவற்றை நாம் பயன்படுத்தலாம்.
குளிர்ச்சியால் முழங்கால் முழங்கைகளில், ஏற்ப்படும் சுருக்கங்களைப் போக்குவதற்கும் கோல்ட் கிரீம் பயன்படுகிறது.