fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கோண்டாவில் உப்புமடம் சந்திரசேகரப் பிள்ளையார் மஹோற்சவம் முற்றாக நிறுத்தம் (Photos)

யாழ். கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் இவ்வருடத்துக்கான வருடாந்த மஹோற்சவம் கொரோனாத் தொற்றின் காரணமாக முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ. சிறீஸ்கந்தராஜா குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(24) ஆரம்பமாகி இடம்பெற வேண்டிய மஹோற்சவத்தின் 12 தினங்களும் மஹோற்சவ தினமாக மாத்திரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

குறித்த நாட்களில் காலை-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரை சாதாரண அபிஷேகம், பூசை மாத்திரம் நடைபெறும். உபயகாரர் உள்ளிட்ட ஐந்து பேர் மாத்திரமே மேற்படி அபிஷேகம், பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வர்.

இதேவேளை, தற்போதைய சூழலில் ஆலயங்களில் அடியவர்கள் ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறும், வீடுகளிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் ஆலயப் பிரதமகுரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :- செ. ரவிசாந்}

Related posts

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஏற்பட்ட பின்னடைவு!

TamilTwin

கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு

TamilTwin

வித்தியா கொலையாளிக்கு மேலுமொரு கொலை வழக்கில் மரணதண்டனை!!

TamilTwin