வெயிலின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலினால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. இதில் இருந்து தப்பிப்பதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்றலாம். கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

பொதுவாக கோடைகாலம் என்பது மார்ச் முதல் மே மாதம் வரை தான் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அதற்கு முன் இருந்தே வெயிலின் தாக்கம் அதிக அளவில் தான் இருக்கிறது. கோடை வெயிலுக்கு அம்மை நோய்களான சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்கள் ஏற்படும். வெயில் அதிகமாக் இருக்கும் பொழுது உடலில் உள்ள நீர்ச் சத்து முழுவதும் வடிந்து விட்டதை போன்ற சோர்வு ஏற்படும்.
இவ்வகை நோய்கள் வராமல் தடுக்க காலை மாலை இரண்டு வேளையும் வெளியில் சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். வெயிலில் சென்று வந்தவுடன் தண்ணீர் பருக கூடாது. இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சன் கிளாஸ் அணிந்து வண்டி ஓட்ட வேண்டும். இதன் மூலம் கண் நோய் வருவதை தடுக்கலாம்.