fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”கொரோனா அச்சுறுத்தல்” விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் அர்ஜூன் !

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க் இந்தியா முழுவதும் 21 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவின் ஆக்ஷன் சிங் நடிகர் அர்ஜுன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர் கூறுகையில், “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர்.

துப்பாக்கியை நமது தலையில் நாமே வைத்து இருப்பது போன்ற நிலைமையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும், வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

காஜல் போட்டோஷூட்டுக்கு செம ரெஸ்பான்ஸ் கொடுத்த ரசிகர்கள்!!

N N

எனக்கு இத்தனை வயசு, உண்மையை உடைத்த வரலட்சுமி !

TamilTwin India

படத்தில் நடிக்க விருப்பம் இல்லை அஜித் பற்றி லிங்குசாமி கூறிய தகவல்

TamilTwin India