fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனாவின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள்!!

கொரோனாத் தொற்று களநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி Iii (a) இலிருந்து iii (b) அல்லது  iv நிலைக்குச் செல்வதைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உள்ளது.

இதுதொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. 

அவையாவன, 
 

1. சமுக இடைவெளி பேணப்பட வேண்டும்  (மக்கள் தொகையில்- 80%)
 

2.  அத்தியாவசிய பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிப்பதற்கான வழிமுறையின் போது விநியோகிப்பாளருக்கும் வாங்குபவருக்கும் இடையில் தொற்றைத் தவிர்க்க கூடிய தூரத்தை பராமரித்தல் அவசியம்

 3. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை 3 நாட்களுக்கு ஒரு முறையாவது வழங்க வேண்டும்

 4. வீட்டுத் தோட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துங்கள்.

 5. வீட்டு வேளாண்மையின்  திறனை மேம்படுத்துதல் – ஊடகங்கள் இதனால் ஏற்படும் பிரதிபலன்கள் பற்றிய அறிவை ஊடகங்கள் வாயிலாகப் பரப்ப வேண்டும்

 6.  கிராமத்திற்குள் உணவுப் பகிர்விற்கு ஊக்குவித்தல் மற்றும் அதன் போது அவர்களுக்கு இடையேயான தூரத்தைப்  பராமரித்தல்

 7. பால் பவுடர், புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்

 8. வங்கி மற்றும் நாணய நடவடிக்கைகளின் போது எமது ( அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் -ஊடகங்கள்  பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும்.

 9. வீட்டிலுள்ளவர்கள் தாங்கள் தமது பொன்னான நேரத்தை எவ்வாறு கழிக்கச் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்

 10. அத்தியாவசிய உணவு,மருந்து, எரிபொருள்  மற்றும் அனைத்து  விநியோகங்களையையும் வலுப்படுத்துதல், பொறுப்புக்களை ஒதுக்குதல், பொறுப்புக்கள் வழங்கிய நபர்களைப் பெயரிடுதல்.

11. கிளினிக்குகள் செய்ய மற்றும் மருந்துகளை விநியோகிக்க இலத்திரனியல் (Information and Communication  technology) இனைப்  பயன்படுத்தல்

 12. இறக்குமதி செய்யப்படும் பால்மா போன்றவற்றைச் சந்தர்ப்பவாத சந்தைப் படுத்துதலிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுதல்.
 

13. மக்கள் வீடுகளில் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் மற்றும் அவர்களுக்கு சுகாதாரக்  கல்வித்  திட்டம்.

14. முப்படையினரின் உதவியுடன்  தனி மனித அங்கி (PPE)  உற்பத்தியை அதிகரித்தல்.
 

15. நோயைத் தடுப்பதற்காகவும் சிகிச்சையளிப்பதற்காகவும் பொது மக்களிடமிருந்து புதுமையான யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு உரிய தளங்களை உருவாக்குதல்.  இதை நடத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு தகுதிவாய்ந்த குழு அமைக்கப்பட வேண்டும்.

{எஸ்.ரவி}

Related posts

வறுமைக் கோட்டுக்குட்பட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!

TamilTwin

கொரோனாவால் இறப்பவரின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது: சுகாதார அமைச்சு

World News

மகளுடன் ஹெலிஹொப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல விளையாட்டு வீரர்!

World News