fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் பிரித்தானியா புலம் முக்கிய செய்திகள்

கொரோனாவால் ஈழத்தமிழ் ஊடகவியலாளர் இலண்டனில் மரணம்! (Photos)

கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவரும், புலம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவருமான புலம்பெயர் தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும், செய்தி ஆசிரியருமான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் (வயது-30) இன்று(09) இலண்டனில் காலமானார். 

கொரோனா வைரஸ் தோற்றே ஆனந்தவர்ணனின் மரணத்திற்கு காரணமெனத் தெரிய வருகிறது. 

பூநகரியில் பிறந்த தில்லைநாதன் ஆனந்த வர்ணன் ரிரிஎன் (TTN) தொலைக்காட்சி செய்திச் சேவையின் செய்தி ஆசிரியராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மிகவும் திறம்படப் பணியாற்றி வந்துள்ளார்.

ஆனந்தவர்ணன் பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் பூநகரியின் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தில்லைநாதனின் புத்திரனுமாவார். 

இதேவேளை, ஊடகத் துறையில் தனது தனித்துவ ஆளுமையால் பலரதும் கவனத்தை ஈர்த்த இளம் ஆளுமை தில்லைநாதன் ஆனந்த வர்ணனின் திடீர் மரணம் புலம்பெயர் தேசத்திலும், ஈழத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!

World News

பாராளுமன்றத்தில் வருகின்றது முக்கோண வடிவிலான பிரமாண்டம்! அனைத்து வசதிகளும் உண்டு

World News

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில்!

World News