fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன் சினிமாவில் ரீ – எண்ட்ரி கொடுக்கும் நக்மா

     1990 – ல் தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நக்மா.  இவர் ரஜினிகாந்த் உடன் நடித்த பாட்ஷா, பிரபு தேவா உடன் நடித்த காதலன் போன்ற திரைப்படங்கள் தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இப்படங்களை தெலுங்கிலும் ரீமேக் செய்து திரையிட்டனர்.  அங்கும் இப்படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. பின்பு இவர் நீண்ட காலமாக சினிமாவினை விட்டு விலகி இருந்தார்.  காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.  இவர் இப்பொழுது மீண்டும் நடிக்க வந்து உள்ளார். 

ரீ - எண்ட்ரி கொடுக்கும் நக்மா

     இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறேன்.  நான் சிறப்பாக நடனம் ஆடுவதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.  2002 இல் ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன். 2007 வரை பெங்காலி, போஜ்பூரி, இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன்.  இப்பொழுது தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.  அதில் ஒன்றில் அல்லு அர்ஜுன் அம்மாவாக நடிக்கிறேன், இப்படத்தினை திரி விக்ரம் இயக்குகிறார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன் என்று நடிகை நக்மா கூறி உள்ளார்.

Related posts

அண்ணாத்த படத்தில் வில்லன் கசிந்தது தகவல் !

TamilTwin India

லாக்டவுனில் முடி திருத்தும் தொழில் இறங்கிய விஷ்ணு விஷால்.!

TamilTwin India

ரசிகர்களின் பாராட்டுக்காகக் காத்திருக்கும் பாலக் லால்வானி

N N