fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இந்தியச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 139 பேருக்கு புதிதாக கொரோனா

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று 3 ஆயிரத்து 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 1 ஆயிரத்து 855 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 14 உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 439 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது: கே.எஸ்.அழகிரி

World News

ஊரடங்கு காலத்தில் அதிகமாக கணவனால் தாக்கப்பட்ட பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

World News

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வர்த்தமானி வெளியீடு

TamilTwin