fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சாரு ஹாஸனுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் பாட்டி

தாதா 87 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது, அந்த பாடலை  பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

கமல் ஹாஸனின் அண்ணன் சாரு ஹாஸன் தான் இந்தப்படத்தின் ஹீரோ,  இந்தப்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சாரு ஹாஸன் ஹீரோவாக நடித்துள்ளது மட்டும் ஷ்பெசல் இல்லை, இதில் மற்றொரு ஷ்பெசல் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடித்திருப்பதுதான். இந்தப்படம்

சாரு ஹாஸனுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் பாட்டி

கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் சாயல்போல் இருக்கும் என கதை வெளியாகி அனைவரின் ஆர்வத்தை ஈர்த்தது. அதையும் தாண்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்படுத்துவது கீர்த்தி சுரேஷின் பாட்டி சாரு ஹாஸன் ஜோடியின் மீதுதான் . இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் சில தினங்களுக்கு முன் வெளியாகியானது. அதில் தேவர் மகன் படத்தில் வந்த இஞ்சி இடுப்பழகா பாடலுக்கு சாரு ஹாஸன், சாரதா பாட்டி நடித்துள்ளனர்.

சாருஹாஸனின் கண்ணில் தெரியும் அந்த காதலும், கீர்த்தி சுரேஷ் பாட்டியின் கியூட்டான நடிப்பும் எல்லோரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.  கதை வயதான இருவரிடையே மலரும் காதலாக இருக்கும் எனவும் கோலிவுட்டில் தகவல் வெளியாகிறது. இதில் அவர்கள் இருவரும் மிக அழகாக நடித்துள்ளனர்.

தாதா 87 ஸ்னீக் பீக் வீடியோவிற்கு பிரபலங்கள் கூட பாராட்டு தெரிவித்தவண்ணம் உள்ளனர். சாருஹாஸன் மற்றும் சாரதா பாட்டிக்கு படம் முடியும் முன்னே
பாராட்டுகள் குவிய ஆரம்பித்துவிட்டன.

Related posts

ஒரு போட்டோக்கு இத்தனை கோடியா, இணையத்தில் வெளியான பகீர் தகவல் !

TamilTwin India

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.வி.ஆனந்த்

TamilTwin India

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்

N N