fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு

ஐ.நாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும், சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை(19) கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கும், போராட்டத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ்மக்களிற்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது.

அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டமையும் ஆகும்.

ஈழத்தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு,போர்க்குற்ற மீறல்கள்,மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ்மக்களிற்குப் பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015 இல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய நிலையிலும்,ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது.

இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு

Related posts

பொது பல சேன அமைப்பை தொடர்ந்து கலைக்கப்படும் நவ சிங்கள ராவய அமைப்பு

World News

கொழும்பில் திறந்துவைக்கப்பட்ட மிக உயரமான கோபுரம் (Photos)

TamilTwin

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ…

TamilTwin