எவ்வளவு நவீனமாக மாறிவிட்டாலும் கிராமத்து சமையலுக்கு இருக்கும் வரவேற்பு அதிகம்தான். நாம் இப்போது கிராமத்து செய்முறையில் பெப்பர் சிக்கன் செய்து அனைவரையும் அசத்துவோம். அந்த கிராமத்து பெப்பர் சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போமா…

செய்முறை : சிக்கனை சுத்தம் செய்யவேண்டும், பிறகு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவ வேண்டும். மஞ்சள் கிருமிநாசினி என்பதால் சிக்கனில் எந்த கிருமித்தொற்றும் இருக்காது. தண்ணீரை முற்றிலும் வடிகட்டி வைத்துவிட வேண்டும். பின் பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை அம்மியில் பொடி செய்துகொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்ததும், அதில் நாம் தயாரித்த பொடியைப் போட வேண்டும். கடைசியாக சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறவும். இப்போது சுவையான கிராமத்து பெப்பர் சிக்கன் ரெடி.
Ingredients
Instructions