முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்த திட்டங்களில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மதிய உணவுத்திட்டம். இந்த மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற காமராஜரின் எண்ணம் சரியாக அமைந்தது.
இன்று பெரிய அளவில் நிறைய படித்தோரை உருவாக்கியதும் அந்தத் திட்டம்தான். இந்த மதியத் திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாக மாற்றினார். இன்று வரை இத்தகைய திட்டங்களால் ஏழைக்குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து அரசுப் பள்ளிகளில் காலை நேர உணவு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சம்மதித்தை ஒட்டி உலகப்புகழ் தொண்டு நிறுவனமான அக் ஷய பாத்ரா சென்னை மாநகராட்சியுடன் இணைந்து முதன்முறையாக அரசுப் பள்ளிகளில் காலை நேர உணவு வழங்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்ந்து இனி செயல்படும் என திவ்யா கூறினார். திவ்யா தென்னிந்தியாவின் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர், அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை நேர உணவு வழங்கவேண்டும் என்பதே அவரது கனவு, இன்று அவர் கண்ட கனவை நிறைவேற்றியும் விட்டார்.